புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட சேத்திலால் நகர், மடுவப்பேட், டோபிகானா, தென்னந்தோப்பு பகுதிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சேத்திலால் நகர் மற்றும் இசிஆர் சாலை முதல் சேத்திலால் நகர் வரை புதிய வடிகால் வாய்க்கால்கள் அமைப்பதற்கு தொகுதி எம்எல்ஏ வைத்தியநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதில், வடிகால் வாய்க்காலின் கட்டிடத்திற்கு ரூ.45 லட்சம் மற்றும் இசிஆர் சாலை முதல் சேத்திலால் நகர் வரை செல்லும் வடிகால் வாய்க்காலுக்கான கட்டடத்திற்கு ரூ.29 லட்சம் செலவிடப்படும்.
இத்தகைய பணிகளுக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில், எம்எல்ஏ வைத்தியநாதன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லூயி பிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.