புதுச்சேரி லஷ்மி ஹயக்ரீவர் திருக்கோவிலின் அருகே நவ நரசிம்மர் திருக்கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி முத்தையால் பேட்டை ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில், நவ நரசிம்மர் திருக்கோவிலை எழுப்புவதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.
இந்த பூஜையில் யாகசாலை அமைத்து, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதிய பிறகு அடிக்கல் நாட்டப்பட்டது. விரைவில் ஆலயம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.