புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னமணி கூண்டு ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திமுக தலைமை பொது குழு உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பூஜைகள் செய்தார். புதுச்சேரி முழுவதும் பல்வேறு ஆட்டோ ஸ்டாண்டுகள், வேன் ஸ்டாண்டுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆயுத பூஜை விழா ஆரவாரமாக கொண்டாடப்பட்டது.
ஆட்டோ ஸ்டாண்டுகளில், வழக்கமாக பூஜைகள் நடைபெற்று, மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, சரஸ்வதிக்கு அவல், கொழுக்கட்டை, கடலை மற்றும் பழங்கள் படைக்கப்பட்டு சரஸ்வதி பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, முத்தியால்பேட்டை சின்னமணி கூண்டு ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பூஜைகளை நடத்தி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல், பெருமாள் கோவில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டிலும் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் பிரபாகரன் கலந்து கொண்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர்.