உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ப்பு

WhatsApp Image 2024 12 19 at 10.55.04 AM | உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ப்பு

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

விழா மேடையில் பேசிய உதயநிதி, “உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா” எனக் கூறி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். மேலும், தனது கல்வி வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடுகையில், “நான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி” என்று கூறி, “நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 12 19 at 10.55.04 AM 1 | உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ப்பு

இது பல சங்கிகளை கோபப்படுத்தும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், “அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன” என்று தெரிவித்தார். மேலும், “அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் பொய்யை மட்டுமே பரப்பி வருவதாக அவர் கூறியுள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி உள்ளதை சுட்டிக்காட்டிய உதயநிதி, “இப்படி ஒரு நீதிபதி இருந்தால், நீதிமன்றத்தில் நியாயம் எப்படி கிடைக்கும்?” என்று கேள்வி எழுப்பினார். மதரீதியான அவதூறு பேச்சு பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதிமுக அதனை ஆதரிக்கவில்லை என்றும், இதன் மூலம் “அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணி தொடர்கிறது” என்பது உறுதியாகிறதென்றார்.

இதையும் படிக்க  சீர்மரபினருக்கான ஒரே சாதி சான்றிதழ் முதல்வருக்கு துரை வைகோ நன்றி

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், மத்திய பாஜக அரசை கண்டிக்கும் ஒரு தீர்மானமும் இயற்றப்படவில்லை என்றார். “இதற்கும் சாட்சி திராவிட இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.

திராவிட இயக்கம் இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதி செய்த உதயநிதி, “கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலினுடன், திமுக மற்றும் கிறிஸ்தவ சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2025ல் ரஷ்யா இலவச mRNA புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது...

Thu Dec 19 , 2024
ரஷ்யா, 2025 ஆம் ஆண்டில் mRNA புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. முன் மருத்துவ பரிசோதனைகள், புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை ஒடுக்குவதும், மெட்டாஸ்டேஸ்கள் (அதிகரித்து பரவல்) குறைவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளன. தனிப்பட்ட நோயாளிகளுக்கான தடுப்பூசிகளை வெறும் ஒரு மணி நேரத்துக்குள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைப்பின் மூலம் விரைவாக செயல்படுத்த முடிகிறது. பாரம்பரிய செயல்முறைகளை விட இந்த நவீன முறை சிகிச்சை தயாரிப்பில் மிகுந்த வேகத்தை வழங்குகிறது. […]
image 230963 1734237476 | 2025ல் ரஷ்யா இலவச mRNA புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது...

You May Like