திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா திருச்சி மாநகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேல சிந்தாமணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், மேல சிந்தாமணி பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, கிரேன் மற்றும் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் வெற்றி கோஷங்களை எழுப்பி, அதிமுக வெற்றி வேட்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், பகுதி கழக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்