விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் தமிழக அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி கரையை கடந்த ஃபென்ஜால் புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பாதிப்புக்குள்ளாகிய அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டது.
மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரும் அவரது மகன் கௌதமசிகாமணியும் மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், அமைச்சர் தனது காரைவிட்டு இறங்காமல் மக்களுடன் பேசியது மக்களை வருத்தமடைச்சது. இதனால், அவர்கள் அமைச்சர் மீது சேற்றை வீசினார்கள் என கூறப்படுகிறது.
இச்சம்பவத்துக்குப் பிறகு அமைச்சர் பொன்முடி காரைவிட்டு இறங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததுடன் மக்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண உறுதிமொழி அளித்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.