கட்சியை காப்பதே முக்கியம்: ஓபிஎஸ்

அதிமுகவை கைப்பற்றிக் கொள்வதினும் காப்பாற்றுவதே முக்கியம் என்று முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 10-ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது.இந்த நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் குறித்து ஓபிஎஸ் வெளியிட்டு அறிக்கையில்
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் - சிறப்பு முகாம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இத்தாலி சென்றடைந்தார் மோடி!

Fri Jun 14 , 2024
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு இத்தாலி அரசு வரவேற்பு அளித்தது.இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் அமா்வில் பங்கேற்க, பிரதமர் மோடி சென்றுள்ளார்.இந்த பயணம் குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் தரையிறங்கிவிட்டேன். உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒன்றாக, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதைதே […]
Modi G7 - இத்தாலி சென்றடைந்தார் மோடி!

You May Like