அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் தொந்தரவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணியை தமிழக போலீசார் கைது செய்ததை கண்டித்து புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமையை எதிர்த்து, பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொள்ள முயன்றபோது, அவரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் பாமக மாநில துணை அமைப்பாளர் வடிவேல் கவுண்டர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன சாலை மறியல் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்கத் தலைவர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலின் காரணமாக சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.