கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாவிற்கு தனது சொந்த செலவில் 2 செண்ட் இடம் வாங்கி கொடுத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்டிலி வழங்கி வருகிறார்.
அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு செண்ட் இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரபதிவு செய்த நிலையில்.
இடத்தின் பத்திரத்தை தற்பொழுது பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.