பொள்ளாச்சி – வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பணி சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா இதனை பொள்ளாச்சியில் வெளியிட்டார்.
பொள்ளாச்சியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,28,489 ஆகும். இதில் ஆண்கள் 1,08,863 பேர், பெண்கள் 1,19,584 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 42 பேர் உள்ளனர்.
வால்பாறை தொகுதி (தனி):
வால்பாறை தொகுதியில் மொத்தம் 1,99,173 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 94,712 பேர், பெண் வாக்காளர்கள் 1,04,436 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் அடங்குகின்றனர்.
இந்த தொகுதிகளில் அடுத்த கட்ட தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.