மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்து உடனடியாக பணிகளையும் துவக்கிவைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 88 வது வார்டு, கே.ஜி.கே சாலை மற்றும், 87 வது வார்டு குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக செங்குளம் நிறைந்து, தண்ணீர் ஊற்றெடுத்து அப்பகுதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உடனடியாக சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து ஊற்று நீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக தனது சொந்த நிதியில் இருந்து பராமரிப்பு பணிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். மேலும் உடனடியாக ஜெசிபி. வாகனம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளையும் துவக்கி வைத்தார்.
மக்களுக்கு பிரச்சினை என்றவுடன் உடனடியாக களத்திற்க்கு வந்து ஆய்வு செய்து தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகளையும் துவக்கி வைத்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணிக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்து வருகிறது.