
பாகிஸ்தான் ஆதரவு கொண்ட தீவிரவாதிகள் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை கண்டித்து, பாஜக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சுந்தராபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று, பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பாஜக நிர்வாகி வசந்த ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மோடி அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் அபிவிருத்தி பாதையில் பயணிக்கிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற பொய்ப் பிரச்சாரம், திமுக தமிழ்நாட்டில் செய்வதைப் போலவே, காஷ்மீரிலும் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் விசா முறைகேடுகள் மூலம் புகுந்து வாழும் பாகிஸ்தானியர்களும், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் கண்டிக்கப்பட வேண்டும். இதை கண்டித்து நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.”
