தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கத்தின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயல்பாடு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநில தலைவர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மகளிர் அணி இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின்னர் அச்சங்கத்தின் மாநில தலைவர் நடராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கடந்த 50 ஆண்டுகளாக 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம், ஆனாலும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை கல்வியில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றாலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்காமல் கல்வி மற்றும் அரசு சார்ந்த வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காமல் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் காலங்களில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போன்ற அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என தெரிவித்தார்