உலகின் சிறந்த விஸ்கி என்ற பெயரை பெற்ற ஷாருக்கானின் DYAVOL

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் DYAVOL (தியாவோல்) என்ற விஸ்கி பிராண்ட், உலகின் சிறந்த மதுபானம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் The Tasting Alliance அமைப்பின் ஏற்பாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மதுபானங்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், மதுபான துறையின் முன்னணி வல்லுநர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். பல நிறுவனங்களின் பிராண்டுகள் பரிசீலனையின்போது, DYAVOL விஸ்கி உலகின் சிறந்த மதுபானம் என தேர்வு செய்யப்பட்டது.

DYAVOL விஸ்கி, ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆரியன் கான் இணைந்து உருவாக்கிய பிராண்ட் ஆகும்.

இந்த ஸ்காட்ச் விஸ்கி 8 அரிய சிங்கிள் மால்டுகளின் கலவையால் தயாரிக்கப்படுகிறது.

ட்ரை ஃப்ரூட்ஸ், டார்க் சாக்லேட், வெண்ணிலா, ப்ளம்ஸ் போன்ற பிளேவர்களுடன், 47.1% ஆல்கஹால் அளவை கொண்டுள்ளது.

750 மில்லி லிட்டர் பாட்டில், மகாராஷ்டிராவில் ரூ.9,800, கர்நாடகாவில் ரூ.9,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2023-ஆம் ஆண்டு அறிமுகமாகிய இந்த பிராண்ட், இவ்வளவு சீக்கிரம் உலகப் பாராட்டைப் பெற்றது ஆச்சரியமாகும்.

சுமார் ரூ.7,300 கோடி சொத்து மதிப்புடன், ஷாருக்கான், நடிப்பு மட்டுமின்றி முதலீடுகள், விளம்பரங்கள் மற்றும் பிராண்டுகளின் ஒப்பந்தங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.
DYAVOL பிராண்ட் பெற்ற இப்பெருமை, அவரின் வர்த்தக செயல்பாடுகளை மேலும் உயர்த்தியுள்ளது.

இதையும் படிக்க  கர்நாடகாவில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மருத்துவ மாணவர்கள் 5 பேர் விபத்தில் பலி...

Tue Dec 3 , 2024
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் சங்கனாசேரி முக்கு பகுதியில் கார் மற்றும் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தனம் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் தேவாநந்தன், ஸ்ரீதீப் வல்சன், ஆயுஷ் ஷாஜி, முஹம்மது அப்துல் ஜாஃபர் மற்றும் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் உட்பட 11 பேர், நேற்று இரவு ஒரு காரில் அதிவேகமாக சென்றனர். இன்று இரவு 9 […]
image editor output image 1183234787 1733206082001 | மருத்துவ மாணவர்கள் 5 பேர் விபத்தில் பலி...