மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி இரு தகவல் தொழில்நுட்ப (IT) பணியாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்வினி கோஸ்தா (24) மற்றும் அனீஷ் அவாதியா (24) என்று விசாரணையில் தெரியவந்தது.கார் ஓட்டிய சிறுவன் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் அரசு மருத்துவர்கள் இருவர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கார் விபத்து சம்பவத்தில், விரிவான விசாரணை நடத்தி பல்வேறு காரணங்களை கண்டறிய 100 பேர் கொண்ட 12க்கு மேற்பட்ட குழுக்களை காவல் துறையினர் அமைத்துள்ளனர்.குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒரு குழுவும், தகவல் பரிமாற்றத்துக்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
You May Like
-
6 months ago
மக்களவைத் தேர்தல் 9 மணி நிலவரம்!
-
6 months ago
ஜெகன்மோகன்,சந்திரபாபு நாயுடு வாக்களித்தனர்
-
6 months ago
தபால் வாக்கு எண்ணிக்கை……
-
6 months ago
வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை!
-
6 months ago
இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…