அரசியலைவிட சினிமா துறை எளிது:நடிகை கங்கனா…

அரசியலைவிட சினிமா துறையில் பணியாற்றுவது எளிது என்று பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த கங்கனா, தனது முதல் படம் வெளியானது முதல் அரசியலில் இணைய கட்சிகள் அணுகி வருவதாகவும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசியலில் சேர வாய்ப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், கங்கனா அளித்த பேட்டியில், அரசியலை விட சினிமா துறையில் வேலை செய்வது ஒப்பீட்டளவில் எளிதானது என்பதை நான் மறுக்க மாட்டேன்.ஹிமாசல் பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கனா ரணாவத், 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கடந்த வாரம் சண்டீகர் விமான நிலையத்தில் பெண் பாதுகாப்புப் படை வீராங்கனை கங்கனாவின் கன்னத்தில் அறைந்த காணொலிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து<br>

Thu Jun 13 , 2024
நீட் தேர்வில் தவறான கேள்விக்கான கிரேஸ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு எழுத விருப்பம் வழங்கப்படும் அல்லது கருணை மதிப்பெண்கள் இல்லாமல் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் முடிவு கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது .”கவுன்சிலிங் தொடரும் என்றும் அதை நிறுத்த மாட்டோம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. Post Views: […]
Screenshot 20240613 111954 inshorts - 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து<br>

You May Like