Sunday, September 14

ஈரான் அதிபர் பலி!

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா். இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தனா். அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரய்சி பயணம் செய்த ஹெலிகாப்டா் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த சிரமத்துடன் தரையிறங்கியதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்டது.ஹெலிகாப்டர் விபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்க  ஈரானில் வருகின்ற 28-ம் தேதி அதிபர் தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *