
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற, விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்  அழகுசுந்தரம் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். தொடர்ந்து 2020 – 21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் ரேங்க் பெற்ற  48 மாணவிகள் மற்றும்  2732 பேருக்கு  பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து புதிய பட்டதாரிகளுக்கு  கல்லூரி  முதல்வர் டாக்டர். பி. பி. ஆரதி  உறுதிமொழி ஏற்புரை வாசித்தார். இறுதியில், கல்லூரிச் செயலர் டாக்டர். என். யசோதா தேவி  நன்றியுரை வழங்கினார்.
