
2024-2025ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்த முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு நாள் முன் கூட்டி, மே 8ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வில் தமிழகம் முழுவதும் 8.21 லட்சம் மாணவர்கள் 3,316 தேர்வு மையங்களில் பங்கேற்றிருந்தனர்.
தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை காலை அரசுத் தேர்வுத் துறை இணையதளங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிற தகவல்களை பயன்படுத்தி முடிவுகளைப் பார்த்து கொள்ளலாம்.