பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 21 வது பட்டமளிப்பு விழா நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் எம் சி டி கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார் கல்லூரியின் முதல்வர் பி. கோவிந்தசாமி கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார், அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஏ டபுள் ப்ளஸ் மதிப்பீட்டைப் பெற்ற முதல் கல்வி நிறுவனம் என்றும் தமிழகத்தில் உள்ள 100 கல்வி நிறுவனங்களில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி 37வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறினார் என் ஐ ஏ கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி ராமசாமி தலைமை உரை ஆற்றினார் அனைத்து பட்டம் பெற்ற பட்டதாரிகளும் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாலிடன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் கணேஷ் தேவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு உட்பூகுதல் இருந்தாலும் பொறியியல் பயன்பாடு இன்றியமையதாதக இருக்கும் என்றும் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மாற்றுத்திறனாளிகளும் தங்கள் எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும் எனவும் தற்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என கூறினார்.
பின்னர் 918 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் இதில் 11 தங்கப்பதக்கங்கள் 11 வெள்ளிப் பதக்கங்கள் 11 வெண்கல பதக்கங்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் என்னையே கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.