கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மோளகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம், சதீஷ்குமார், மற்றும் மாலதி இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதில் அவர்கள் குடும்பத்துடன் இருந்து விவசாயம் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் அவரது நிலத்தை சுற்றியும் உள்ள காலி நிலங்களை பொன்னுச்சாமி, சாந்திநாதன், சரவணன், துரைசாமி பாலசுப்பிரமணியம் ஆகியோர் விலைக்கு வாங்கி அதை வீட்டு மனை இடங்களாக பிரித்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடு களை செய்து வருகின்ற னர். இவர்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பொதுப் பாதையை மரித்து பாதையை அடைத்துள்ளனர் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த, நிலையில் நிலத்தை அளவிட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நில அளவையாளர் நிலத்தை அளவிடு செய்யாமல் எதிர்தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை அளக்காமல் நிலத்தை அளந்த தாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவவகத்தில் தங்களது நிலத்தை நில அளவையர் சரியான முறையில் அளந்து தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள் இந்த நில அளவையர் சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் மனு அளித்தும் வருவாய் அலுவலர் அவர்களை சந்தித்தும் மனு அளித்தும் காவல் நிலையத்தை அணுகியும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என விவசாயிகள் தங்களுடைய வேதனையை தெரிவித்தனர்.
