பெண் தூக்கிட்டு உயிரிழப்பு; உறவினர்கள் மறியல் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் திருமணம் ஆன பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் கரிசல்குளத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் சந்தியா 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சில நேரங்களில், கணவன் மது அருந்தி வந்து மனைவி சந்தியாவிடமிருந்து நகைகள் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று, நகைகளை கேட்டு நடந்த தகராறில் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து விட்டனர். ஆனால், பின்னர் சந்தியா வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், 10 வயதான அவரது மூத்த பிள்ளை தினசூரியன்...