தேவபட்டு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்குபற்றும் பாரம்பரிய பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் அமைந்த தேவபட்டு கிராமத்தில், ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பிறகு அந்தரநாச்சியம்மன் கோவிலில் நன்றி கூறும் விதமாக செவ்வாய் பொங்கல் வைத்து, வழிபாடு மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெறும் பாரம்பரிய விழா இன்று நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்த பாரம்பரிய விழாவில், பெண்கள் பங்குபற்றாமல், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.இந்தப் பாரம்பரியத்தில், தேவபட்டு கிராமத்தின் ஆண்கள் மண்பானைகள் மற்றும் காய்கறிகளை கொண்டு ஊர்வலமாக மணிமுத்தாறு ஆற்றை சென்று, அங்கு ஊற்று தோண்டி பனை ஓலையில் தண்ணீர் எடுத்து, மண்பானையை நிரப்பி அந்தரநாச்சியம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவர்.விழாவின் பின், கிராமத்தின் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசையாக வந்து மஞ்சுவிரட்டு மாடுகளுக்கு மரியாதை செலுத்துவார்கள். கிராம மக்கள் இந்த பாரம்பரிய விழாவை கால்நடைகள், விவசாயம் மற...