நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பொது மக்களிடம் கொலு வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பொள்ளாச்சியில் விவேகானந்த கலை நற்பணி மன்றம் மற்றும் ஆர்ஷ வித்யா பீடத்தின் சார்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. 10ம் நாள் முக்கிய நிகழ்வாக, மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடந்தது. இந்நிகழ்வுக்காக 30 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டது. […]

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதி, கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதொரு விபத்து நடைபெற்றுள்ளது. கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள் கொண்ட குழு, ஆழியார் அணை மற்றும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். நா.மு.சுங்கம் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவியும் மாணவரும், எதிரே வந்த அரசு பேருந்துடன் மோதியதில், சம்பவ இடத்திலேயே மாணவி காவிய ஸ்ரீ […]

“எளிய பயணிகளுக்கு கட்டண உயர்வின்றி தரமான சேவையை ரயில்வே துறை வழங்கி வருகிறது. விபத்துகளின் விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கையாக செயல்படும் என்று நம்பிக்கை இருக்கிறது” – பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன். கோவை வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்தபின், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல […]

பொள்ளாச்சியில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம், திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை, மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இளம் தலைமுறைக்கு நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 10 நாட்கள் பெருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழா கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், தினமும் ஆதீனங்களின் சொற்பொழிவுகள், ஆன்மீக பட்டிமன்றங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் […]

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் பிரபலமான கோயிலாகும், இங்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அம்மனை தரிசிக்க வருவது வழக்கமாகும். இவ்வாறு வருபவர்கள் உண்டியலில் தங்களின் காணிக்கைகளை செலுத்துகின்றனர், மற்றும் இந்த காணிக்கைகள் மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்புப் பணிகள் நேற்று தொடங்கின. நிரந்தர உண்டியல் திறப்பில் ரூ.60,40,517/- மற்றும் தட்டு காணிக்கையிலிருந்து ரூ.23,24,376/- என மொத்தம் ரூ.83,70,893/- […]

கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு. இன்றிலிருந்து கோவை மாநகரம் அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இனி மேற்கொண்டு இருசக்கர வாகனங்களில் வரும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கல்லூரிக்குள் வரும்பொழுது தலைக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களை கல்லூரி […]

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை மழுக்குப்பாறை பகுதியில் வனப்பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த யானைகள் கூட்டம் தேயிலை தோட்ட பணியாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ராஜகுமாரி என்பவர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது புதிரில் இருந்து வெளியேறிய காட்டு யானை ராஜகுமாரியை தந்ததால் குத்தி தாக்கியதில் பலத்த காயமடைந்தார் வால்பாறை அரசு மருத்துவமனையில் […]

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் குற்றங்கள் சம்பவங்களை குறைக்கும் நோக்கில் *சுமார் 96 கிராமங்களை* கண்டறிந்து கோவை மாவட்ட காவல் துறையினர் மூலம் கடந்த (05.10.2024 – 06.10.2024) இரண்டு நாட்களாக *PUBLIC COMMUNITY MEETING* நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம பொதுமக்களுக்கு மாவட்ட காவல் துறையினர் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையுடன் அனைவரும் […]

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (அக். 7) முதல் 40 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், ரோப் கார் போன்ற வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மலை உச்சியை 2 நிமிடங்களில் அடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவைக்கு பக்தர்கள் […]

தமிழகத்தில் தற்போது தொடர் விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கும் சென்ற வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஆழியார் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சிலர் நான்கு சக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது அங்கலகுறிச்சி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை ஏறும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த நான்கு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களின்அலறல் […]