பொள்ளாச்சி அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பெண் காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல அரிய உயிரினங்கள், யானை, மான், வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்டவை வாழ்கின்றன. இதன் அருகே உள்ள கோட்டூர் பருத்தியூர் உமாண்டி வன பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த களப்பணியாளர்கள், இரண்டு பெண் காட்டு யானைகள் தனியார் தோட்டத்தில் இறந்து கிடப்பதை […]

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அவிநாசி மேம்பாலம் அருகில் நேற்று பெய்த கனமழையால் நீர் தேங்கி இருந்ததை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், உதவி ஆணையர் திரு. செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு. கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி. ஹேமலதா, உதவி பொறியாளர் திரு. கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி மற்றும் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போலீசார் போதைப் பொருட்கள், குட்கா, பான் மசாலா போன்றவற்றின் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில், உதவி ஆய்வாளர் கௌதம் மற்றும் போலீசார் கோபாலபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பாலக்காட்டில் இருந்து […]

முதலியார்பேட்டை தொகுதியில், போலீஸ் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த தியானேஸ்வரன் மற்றும் கௌரவ் ஆகிய சிறுவர்கள், வழியில் கிடந்த ரூ.70 பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கு பாராட்டுச் தெரிவிக்கும் விதமாக, போலீசார் அவர்களுக்கு சால்வை அணிவித்து, ரூ.100 வெகுமதி வழங்கினர். சிறுவர்கள் அந்த பணத்தை ஏற்க மறுத்ததால், அதற்குப் பதிலாக அவர்களுக்கு சாக்லேட் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகில் உள்ள 10 நெம்பர் முத்தூர் கிராமத்தில், காராள வம்ச கலை சங்கத்தின் சார்பில், பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை பற்றி இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மற்றும் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு பிரம்மாண்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் பெண்களின் உடல் நலம் பாதுகாப்பையும் குறிப்பிடப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் முருகபெருமாள் […]

திருச்சி ஜங்ஷன் பாலம் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ. 138 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பழைய பாலம் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் (நகரப் பேருந்துகளை தவிர) டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து தலைமை அஞ்சலகம், கண்டோன்மென்ட், வெஸ்ட்ரி ரவுண்டானா, ஆட்சியரகம், மிளகுப்பாறை வழியாக செல்ல வேண்டும். மறுமுகத்தில் குரு […]

சீரடி சாய்பாபாவின் 106-வது சமாதி தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில் அமைந்துள்ள தென் சீரடி சாய்பாபா கோயில், சுமார் 35,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்து, தென் இந்தியாவில் உள்ள பெரிய சாய்பாபா கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் 2020-ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஆன்மீக தலைவர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சமயபுரம் […]

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பொது மக்களிடம் கொலு வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பொள்ளாச்சியில் விவேகானந்த கலை நற்பணி மன்றம் மற்றும் ஆர்ஷ வித்யா பீடத்தின் சார்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. 10ம் நாள் முக்கிய நிகழ்வாக, மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடந்தது. இந்நிகழ்வுக்காக 30 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டது. […]

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதி, கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதொரு விபத்து நடைபெற்றுள்ளது. கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள் கொண்ட குழு, ஆழியார் அணை மற்றும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். நா.மு.சுங்கம் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவியும் மாணவரும், எதிரே வந்த அரசு பேருந்துடன் மோதியதில், சம்பவ இடத்திலேயே மாணவி காவிய ஸ்ரீ […]

“எளிய பயணிகளுக்கு கட்டண உயர்வின்றி தரமான சேவையை ரயில்வே துறை வழங்கி வருகிறது. விபத்துகளின் விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கையாக செயல்படும் என்று நம்பிக்கை இருக்கிறது” – பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன். கோவை வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்தபின், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல […]