கோவை, லட்சுமி மில்ஸ்:ரோபோடிக் மற்றும் டிஏவிஐ (TAVI) தொழில்நுட்பத்துடன் இதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்படும் முறைகள் குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் செங்கோட்டுவேலு மற்றும் எம்.எம். யூசுப் விளக்கமளித்தனர். இந்த நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த புதிய தொழில்நுட்பங்கள் வயதானவர்களுக்கு ஏற்படும் இதய வால்வ் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகின்றன. ரோபோடிக் மற்றும் டிஏவிஐ முறைகளின் மூலம் தொடையின் மூலம் ஊசி […]

கோவை:மாற்றுத்திறனாளிகளுக்கான “சுவர்கா” என்ற தன்னார்வ அமைப்பின் 10ஆவது ஆண்டு விழா கோவையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2025ஆம் ஆண்டுக்கான “சிறப்பு மிக்கவன்” காலண்டரை வெளியிட்டார். நிகழ்வில் பேசிய நீதிபதி விஸ்வநாதன், “மாற்றுத்திறனாளிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடம் பெற முடியாது என்று யாரும் மறுக்க முடியாது. 2016ஆம் ஆண்டில் கொண்டு வந்த சட்டம், இத்தகைய […]

கோவை: உலக ஆஸ்டியோபோரோசில் தினம் மற்றும் உலக மூட்டுவலி தினத்தை முன்னிட்டு, எலும்பு ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு வாக்கத்தான் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாக்கத்தானை கோவை வடக்கு காவல்துறை ஆணையர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பிரகதி மருத்துவமனையில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் குழந்தைகள், கையில் பதாகைகளை ஏந்தி, எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வாக்கத்தான் ரேஸ்கோர்ஸ் மீடியா […]

கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தரம் கொண்ட ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) அங்கீகாரம் பெற்றுள்ளது. சென்னை தவிர, தமிழகத்தில் இதைப் பெற்ற முதல் மருத்துவமனை என்ற பெருமையை இம்மருத்துவமனை பெற்றுள்ளது. சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றியமைக்காகவே, ஜே.சி.ஐ. அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முக்கிய அங்கீகாரமாகும். இதுகுறித்து மருத்துவமனை […]

பொள்வாச்சி அருகே உள்ள வால்பாறை ஊசிமலை எஸ்டேட்டில், 4 வயது சிறுமி சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐயூன் அன்சாரி, அவரது மனைவி நசீரான் ஆகியோர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகள், 4 வயது அப்துல் கதும், வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை வேகமாக பாய்ந்து, சிறுமியை கடித்து இழுத்து கொண்டு அடர்ந்த காட்டுக்குள் சென்றுள்ளது. […]

பொள்ளாச்சி ரயில் நிலையம்: சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின், ரிசர்வேசன் கவுன்டர் மீண்டும் திறக்கப்படும் – ரயில்வே கோட்ட மேலாளர் தகவல் பொள்ளாச்சி: பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பொள்ளாச்சி வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், இப்பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு, பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேரில் பார்வையிட நேற்று […]

தீபாவளி சிறப்பு கண்காட்சி ‘கோ கிளாம்’ கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் இன்று தொடங்கியது. இந்த தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி துவக்க விழாவில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், பவித்ரா ராகவ், […]

பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில், சதீஷ்குமாரின் 4 வயது மகள் கிருஷிகாஸ்ரீ, நாய் கடித்து பலத்த காயமடைந்தார். சதீஷ்குமார் தனது இரு மகள்களான கிருஷிகாஸ்ரீ மற்றும் ரிதன்யாஸ்ரீயை டியூஷன் சென்டரில் விடச் செல்வதற்காக சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், கிருஷிகாஸ்ரீ மீது தாக்கி, தலை மற்றும் முகத்தில் கடித்தது. சிறுமி பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கோமங்கல காவல் […]

அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காதவாறு புதிதாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் உள்ள அவிநாசி மேம்பாலம் மற்றும் வஉசி பூங்கா பகுதிகளில் மழை நீர் தேங்குவதால், அதை அகற்றும் நோக்கில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, […]

கோவை சிங்காநல்லூர் அருகே மழை பாதித்த பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து, கால்வாய்கள் நிரம்பியதால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை சரிசெய்ய, கோவை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மின்சார துறை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி, மழையால் […]