
பள்ளி வாகன ஓட்டுநர் கைது!
புதுச்சேரியில் வேனில் சென்றுவந்த அரசு பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட வேன் ஓட்டுநரை போலீசார் போக்சோ வழக்கில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரி மணவெளி தொகுதகுட்பட்ட தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயது சிறுமியிடம் அதே பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவியிடம் வேன் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமையில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நையினார்மண்டபத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (25), வேன் ஓட்டுநரான இவர் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீடுக்கும் அழைத்து வரும் பணி செய்து வந்தார். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் வேனில் பயணித்த அரசு பள்ளியில் 9 ...