
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…
36வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியில் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்படுகிறது. இதில், பொதுமக்களுக்கு சாலை விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணி, பாலக்காடு சாலையில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் துவங்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் நாகராஜன் மற்றும் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கொடியசைத்து ...