Tuesday, August 5

தமிழ்நாடு

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது, அதற்கிடையில் பொள்ளாச்சியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சக்திவேல் துவக்கி வைத்தார். பேரணி மகாலிங்கபுரம் நியூ ஸ்கீம் ரோடு பேருந்து நிலையம் வழியாக சென்றது. மாணவ மாணவிகள் ஹெல்மெட் அணிவதற்கான முக்கியத்துவம், வாகனங்களில் செல்லும் பொழுது செல் போன் பேசாதிருத்தல், காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது, மது போதையில் வாகனங்களை ஓட்டாமலிருத்தல், வாகனங்களின் ஆவணங்களை சரியாக வைத்திருத்தல் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டாதிருத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற...
கோவையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

கோவையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

கோவை
கோயம்புத்தூர் மெட்ரிகுலேசன் பள்ளிகள் கல்விசார்குழு சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பள்ளி முதல்வர்களுக்கும் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களை பாராட்டினார்.இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதினை ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பங்கஜ் பெற்றார். 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களும், 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100/100 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார்பாடி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தமிழ்நாடு...
ஆனைமலை மாசாணி கோவிலில் குண்டம் திருவிழா: 75 அடியில் மூங்கில் கொடிக்கம்பம்…

ஆனைமலை மாசாணி கோவிலில் குண்டம் திருவிழா: 75 அடியில் மூங்கில் கொடிக்கம்பம்…

பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலின் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு, வனப்பகுதியில் இருந்து 75 அடி உயரமான மூங்கில் கொடிக்கம்பம் கொண்டு வரப்பட்டது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி கும்பிடுகிறார்கள். குண்டம் திருவிழாவுக்கான அத்தியாவசிய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரதத்தை தொடங்கிய நூற்றுக்கணக்கான பக்தர்கள், சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 75 அடி உயரம் கொண்ட மூங்கில் கொடிக்கம்பத்தை தோளில் சுமந்து மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துக் கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நாளை அதிகாலை, ஆனைமலை ஆற்றில் சிறப்பு பூஜைகள் முடிந்து, கொடிக்கம்பம் தோளில் சுமந்து, "மாசாணி தாயே" என்ற கோஷத்து...

ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சாக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காதபடி எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாக்கோட்டை ஒன்றியத்தில் அரியக்குடி, இலுப்பகுடி, சங்கராபுரம், மானகிரி, தளக்காவூர் போன்ற பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால், மக்கள் பெரும்பாலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சார்ந்தே தங்களது வாழ்வாதாரத்தை சமாளித்து வருகின்றனர்.அந்த நிலையின் மத்தியில், தமிழக அரசு இந்நிலையிலுள்ள 5 கிராமங்களை காரைக்குடி நகராட்சியுடன் இணைத்து, அவற்றை மாநகராட்சியாக அறிவித்துள்ளது. இந்த முடிவினை தொடர்ந்து, அந்த கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் அரசு சார்பில் நடைபெற்று வர...
அருள்மிகு மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

அருள்மிகு மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

கோவை
கோவை மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12.12.2024 அன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, 48 நாட்கள் நிலையான மண்டல பூஜை இன்று நிறைவடைந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளி கிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில் திருப்பரங்குன்றம் சிவாச்சாரியார் சிவஸ்ரீ ராஜபட்டர் குழுவினர் சிறப்பாக பூஜையை ஏற்பாடு செய்தனர். இதில் உதவி ஆணையர் கைலாச மூர்த்தி, சூரிய நாராயணர் கோவில் தம்பிரான் சுவாமிநாத சுவாமிகள், அறங்காவலர் மஞ்சுளாதேவி, கோவில் நிர்வாகம் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ...
நகராட்சியுடன் இணைப்பை எதிர்த்து 500 பேர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நகராட்சியுடன் இணைப்பை எதிர்த்து 500 பேர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து, பொள்ளாச்சி அருகிலுள்ள மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி, சின்னம்பாளையம், பணிக்கம்பட்டி உள்ளிட்ட 3 ஊராட்சிகளின் மக்கள், 500க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இப்பகுதியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள், அவர்கள் விவசாயக் கூலிகள், தென்னை நார் தொழிற்சாலை வேலைகளில், மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுகிறார்கள். தற்போது, பட்டியலின மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளை பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், கிராம சபை கூட்டங்களிலும், பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் வீட்டு வ...
“சந்திரமாரி பள்ளியில் புத்தாக்க கண்காட்சி: மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றார்”

“சந்திரமாரி பள்ளியில் புத்தாக்க கண்காட்சி: மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றார்”

கோவை
கோவை காளப்பட்டியில் அமைந்துள்ள சந்திரமாரி சர்வதேச பள்ளியில் புத்தாக்க வாரத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் துபாயின் லேப் ஆப் ஃபியூச்சர் இணைந்து, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் புத்தாக்க செய்முறை பிரம்மாண்ட திட்ட கண்காட்சியை ஒழுங்கு செய்தது. கடந்த ஐந்து நாட்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில், அவர்கள் குழுவாக சேர்ந்து ட்ரோன் தயாரிப்பு, ராக்கெட் ஏவுதல், ரொட்டிக்ஸ், ஏரோ மாடலிங் மற்றும் டெலிஸ்கோப் உருவாக்கம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை கற்கின்றனர். இந்த பயிற்சியின் போது, மாணவர்கள் தங்கள் செய்முறை படைப்புகளை நிகழ்த்தி, அவற்றின் செயல்பாட்டை விளக்கி காட்டினர். கண்காட்சியில் செயல்படும் ட்ரோன்கள், ராக்கெட்கள், ஏரோ மாடலிங் மற்றும் நுட்பமான ரோபோடிக்ஸ் வடிவமைப்புகள் போன்ற பல்வேறு படைப்புகள் கண்காட்சிக்கு இடம் பெற்றிருந்தன. பெற்றோர்கள், பிற பள்ளி மாணவர்கள் மற்...
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: விழிப்புணர்வு பேரணி…

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: விழிப்புணர்வு பேரணி…

திருச்சி
ஜனவரி மாதம் ஆண்டுதோறும் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தொடர்ச்சியில், திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில், திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான பேரணி நடத்தப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் பேரணியாக சென்றனர். பேரணி முடிவினரை, பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, சாலை பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில் நடராஜன், போக்குவரத்து துறை அதிகாரிகள் வெங்கடேசன், அன்பு பூங்கொடி, ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  ...
பொன்மலை ‘ஜி’ கார்னர் சாலை விபத்து: துரை வைகோ உடனடி தீர்வு

பொன்மலை ‘ஜி’ கார்னர் சாலை விபத்து: துரை வைகோ உடனடி தீர்வு

திருச்சி
திருச்சி:சென்னை-திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி பொன்மலை 'ஜி' கார்னர் பகுதியில், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாலையை 15க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பயன்படுத்துகின்றனர்.கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலைக்கு உரிய தீர்வு இல்லை. இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்பின்னர், துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் திட்டஇயக்குனர் பிரவீன் குமார் உட்பட அதிகாரிகள் இந்த பிரச்சினையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த நிலையில், துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:“பொன்மலை 'ஜி' கார்னர் சாலை பிரச்னை குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மற்...
15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி
15ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. பேரணியை வட்டாட்சியர் மேரி வினிதா கொடியசைத்து தொடங்கினார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி, பொதுமக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், கோவை ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர், அவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.உறுதிமொழி: "இந்தியக் குடிமக்களாகிய நாம், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம். எவ்வித அச்சம் இன்றி, மதம், இனங்கள், சாதி, சமூகத் தாக்கம் அல்லது வேறு ஏதேனும் தூண்ட...