Wednesday, July 30

கோவை

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…

கோவை
உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீல நிற பலூன்கள் பறக்க விட செய்தார். அதனை தொடர்ந்து வாக்கத்தான் நிகழ்வை துவக்கும் போது கொடியை ஆட்டிசம் சம்பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை பிடித்து அசைக்க செய்து வாக்கத்தானை துவக்கி வைத்தார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் அழுத்தியது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ஆட்டிசம் குறித்து மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பல்வேறு அறிவுரைகள் விழிப்புணர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றார். இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகளை கண்டுபி...
TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி…

TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி…

கோவை, விளையாட்டு
கோவை, சுந்தராபுரம் பகுதியில் MSD TURF இல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழிகாட்டுதலின் படி மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் ஜெயசிம்மன் தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.R.A செந்தில் மற்றும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் மா.ப. ரோகிணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கு கோப்பைகள்  மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் முன்னால் அமைச்சர் சண்முகவேலு, டேவிட் அண்ணா துறை, கே. சுகுமார் Ex.MP., மற்றும் N.R. அப்பாதுரை , P. சரவணன் , P. பாஸ்கரன், S.R. சதிஸ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் மாநில அம்மா பேரவை துணைத்தலைவர்கள், இளைஞரணி துணைத்தலைவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நக...
“கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா”

“கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா”

கோவை
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா  கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி  தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முதல்வா் முனைவா் சங்கீதா  ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக  கான்பூா், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் முனைவா் நச்சிகேதா திவாரி கலந்து கொண்டு பேசினார்… அப்போது பேசிய அவர்,உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் நாகரீகத்தில்  ஒரு அடிப்படை உண்டு என்றும்  ஐரோப்பிய நாடுகள் மொழியையும் மத்திய கிழக்கு நாடுகள் மதத்தையும்  ஆப்பிரிக்க நாடுகள் பழங்குடியின பண்புகளையும் தம் நாகரிகத்தின் அடிப்படையாகக் கொண்டன என்றும் குறிப்பிட்டார். பாரத நாட்டின் நாகரிகத்தின் செழுமைக்கு மொழி,  மதம்,  உணவு, இனம் ஆகியன அடிப்படைகளாக அமையவில்லை என்ற...
ஆசியா நகை கண்காட்சி…

ஆசியா நகை கண்காட்சி…

கோவை
கோவை பந்தய சாலையில் உள்ள விவாண்டா ஹோட்டலில் பிப்ரவரி 7, 8, மற்றும் 9ஆம் தேதிகளில் தென்னிந்தியாவின் பிரபலமான ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025 அதன் 52வது பதிப்பை விமரிசையாக தொடங்கியுள்ளது. இந்த பிரமாண்டமான நகை கண்காட்சியில், இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகைக்கடைக்காரர்கள் அவர்களின் சிறந்த நகை வடிவமைப்புகளை ஒரே இடத்தில் வெளிப்படுத்துகின்றனர். கண்காட்சி மற்றும் விற்பனை நேரம் தினமும் காலை 10.30 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும். ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025 இன் தொடக்க விழாவில் வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் ராஜேஷ் லுண்ட் (ICICIJ தலைவர்), ஜூவல்லரி கியூரேட்டர் சங்கீதா பீட்டர், P & S குழும நிறுவனங்களின் நிறுவனர் பிரியங்கா சுந்தர், ஹெல்த் பேசிக்ஸ் & கோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வாதி ரோஹித், தாஜ் ஜிட்டோ பெண்கள் பிரிவுத் தலைவர் ரீனா கோத்தாரி, திருமதி உலக அழகி...
புதிய ஆட்சியராக பவன்குமார் பொறுப்பேற்பு…

புதிய ஆட்சியராக பவன்குமார் பொறுப்பேற்பு…

கோவை
கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் பதவியேற்றுள்ளார். கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அவர், பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.2016 ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவர் இதற்கு முன் திருவள்ளூர், நாகர்கோவில், தாராபுரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தற்போது தமிழ்நாடு திறந்த மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ...
பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் புதிய வெண்கல சிலை!

பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் புதிய வெண்கல சிலை!

கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ரவுண்டானாவில், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. புத்தகப்பை சுமந்தபடி, புத்தகங்களின் மீது ஏறி உலக உருண்டையை நோக்கி செல்லும் குழந்தை உருவில் அமைக்கப்பட்ட இந்த சிலை, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த சிறப்பான விழிப்புணர்வு சிலையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வருவாய் அலுவலர் சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இந்த சிலையை உருவாக்கிய அடிசியா நிறுவனத்தின் தலைவர் மணிகண்டன், "பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட இதை நிறுவியுள்ளோம். கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றம் ஏ...
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை…

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை…

கோவை
கோவை மாவட்டத்தில் சிறப்புமிக்க அம்மன் கோயில்களில் ஒன்றான ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய அங்கமான மயான பூஜை நள்ளிரவில் மிகுந்த பக்திபரவசத்தில் நடத்தப்பட்டது. மயான பூஜையின் முக்கிய நிகழ்வுகள்:மாசாணியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20க்கும் மேற்பட்ட அருளாளிகள், அம்மனின் சூலம் தாங்கி ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு பம்பை இசையின் முழக்கத்துடன் சென்றனர்.மண்ணால் உருவாக்கப்பட்ட மயான தேவதையின் சயன கோலத்தை மறைத்திருந்த திரை நள்ளிரவு 2 மணிக்கு விலக்கப்பட்டது.அருளாளி அருண், அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியவாறு பம்பை இசையின் சத்தத்தில் நடனம் ஆடினார். பின்னர் பட்டுசேலையில் பிடி மண்ணை எடுத்தார், இதனுடன்...
அண்ணாவின் 56வது நினைவு நாளில் திமுக அமைதி பேரணி….

அண்ணாவின் 56வது நினைவு நாளில் திமுக அமைதி பேரணி….

கோவை
திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், கோவை தெற்கு மாவட்டம் பாழ்ந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச்-இலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் கழக உயர்நிலை செயல் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்த இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தேவ சேன...
அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் மலைப் பாதை திறப்பு !

அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் மலைப் பாதை திறப்பு !

கோவை
கோவை மாவட்டம், பூண்டி, செம்மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலுக்கு செல்லும் மலை ஏற்றப் பாதைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி, 10 வயதிற்கும் மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குள்ள ஆண்கள் மட்டுமே கிரிமலை சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, மூச்சு திணறல் மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பக்தர்களின் உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ள தீர்மானம். அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், இந்த மலை ஏற்றம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே நடைபெறும். மலை ஏறுவதற்கு எந்தவொரு கட்டணமும் இல்லை என்றும் கோவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், வெள்ளிய...
கோவையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

கோவையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

கோவை
கோயம்புத்தூர் மெட்ரிகுலேசன் பள்ளிகள் கல்விசார்குழு சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பள்ளி முதல்வர்களுக்கும் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களை பாராட்டினார்.இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதினை ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பங்கஜ் பெற்றார். 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களும், 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100/100 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார்பாடி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தமிழ்நாடு...