
எச். ராஜாவுக்கு வீட்டு காவல் !
திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை, காரைக்குடி போலீசார் சிறைப்படுத்தி வீட்டு காவலில்வைத்தனர்.மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தவிருந்ததால், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி பண்ணை வீட்டில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டார். இதனை கண்ட போலீசார், காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில், எச். ராஜாவை தடுத்து நிறுத்தி, அவர் பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டது. இதனால், எச். ராஜா போலீசாருடன் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
...