மிர்சாபூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து மிர்சாபூர்-வாரணாசி எல்லையில், கச்சவான் மற்றும் மிர்சாமுராத் இடையே ஜிடி சாலையில் ஏற்பட்டது. விபத்து குறித்து மிர்சாபூர் காவல் கண்காணிப்பாளர் அபிநந்தன் விளக்கமளித்தார். “படோஹி மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 13 தொழிலாளர்கள், பணியை முடித்து டிராக்டர் டிராலியில் தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை 1 […]

தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதியும், சத் பூஜை நவம்பர் முதல் வாரத்திலும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பெரும்பாலான மக்கள் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். இதை மனதில் கொண்டு ரயில்வே துறையின் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்த […]

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு மற்றும் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இதன் பேரில், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். கே. பகவதி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் பொள்ளாச்சியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, […]

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் 24 வயதுக்கு குறைவான மக்கள்தொகை 58.2 கோடியிலிருந்து 58.1 கோடியாகக் குறைந்துள்ள நிலையில், தற்கொலை எண்ணிக்கை 6,654இல் இருந்து 13,044ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆய்வில், மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 3 இல் 1 பங்கு இந்த மாநிலங்களில் காணப்படுகிறது. தற்கொலை செய்யும் மாணவர்களின் […]

ஆதார் ஆணையம், நாடு முழுவதும் ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டை, இந்தியாவில் முக்கியமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது, மேலும் பல்வேறு அரசின் நலத்திட்ட சேவைகளுக்கான அடையாளமாகவும் பயன்படுகிறது. தற்போதைய கணக்குப்படி, இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். ஆதார் அட்டை மூலம் பல துறைகளில் அவசியமான சேவைகள் கிடைக்கின்றன. ஆதார் தொடர்பான மோசடிகளை […]

கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தர்ஷன் சிறையில் சிகரெட் பிடித்து, தனது நண்பர்களுடன் பேசுவதைக் காண்பிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தர்ஷனுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் பணிபுரிந்து வந்த […]

கலை, அறிவியல், பொறியியல், மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் வழக்கமாக கருப்பு நிற அங்கியும், தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், இப்போது மருத்துவ மாணவர்கள் இனி பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கலாசாரம் ஐரோப்பிய நாடுகளில் தொடங்கியது என்றும், ஆங்கிலேயர்கள் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் […]

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண் டிப்ளமோ படித்து வந்த போது, தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்த நபர் காரணமாக மனஉளைச்சலுக்கு உள்ளாகி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். https://x.com/TeluguScribe/status/1825418108968071592?t=HYsLgV8NuUUtJ7XlsVbuXw&s=19 ஆனால் சிகிச்சை பலனின்றி […]

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ஹரியானாவின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 3ஆம் தேதி முடிவடைகிறது, மகாராஷ்டிராவின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதி முடிவடைகிறது. ஜார்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதி முடிவடைகிறது. இதனால், இந்த 3 மாநிலங்களில் பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கிவிட்டன. மேலும், […]

இன்று (ஆக. 16) காலை, புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளுக்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் அதிகாலை 3 மணியளவில் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஓஎஸ்-08 என்பதைக் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் […]