
1929ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிட்ரோன், ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான பிரபலமான ஃபிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனம். கார் தயாரிப்பில் தனித்துவமான முறையில் முன்னேறியுள்ள இந்த நிறுவனம், உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
அதேபோல், ஆட்டோமொபைல் விற்பனை மற்றும் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜெயராஜ் குழுமமும் தனது 100 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்போது, இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டணியாக இணைந்து, இந்தியாவில் சிட்ரோன் கார் விற்பனையில் முன்னேற்றம் செய்ய முனைந்துள்ளன.


இதன் ஒரு பகுதியாக, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூரில், ஜெயராஜ் குழுமத்தின் சார்பில் புதிய மற்றும் நவீனமான சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் மிகுந்த பிரமாண்டத்துடன் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சிட்ரோன் பிராண்ட் டைரக்டர் சிசிர் மிஸ்ரா, ஸ்டெல்லாண்டிஸ் வணிகப்பிரிவு இயக்குனர் சதீஷ் கண்ணன், மற்றும் ஜெயராஜ் குழும இயக்குனர் அஜய் ஜொனாதன் ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, வாடிக்கையாளர்களுக்கு புதிய சிட்ரோன் கார்கள் வழங்கி, அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
சிசிர் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:சிட்ரோன் நிறுவனம் உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வியாபார இருப்பு கொண்டுள்ளது.இந்திய சந்தையில் C3, பசால்ட், ஏர்கிராஸ், C3 Aircross, C5 Aircross போன்ற ஐந்து முக்கிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது.இந்திய சாலைகளில் சிட்ரோன் நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs) மிகப்பெரிய பங்காற்றவுள்ளன, மேலும் சிட்ரோன் இத்துறையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தும்.
பிற கார் நிறுவனங்களை ஒப்பிடும்போது, சிட்ரோன் கார்கள் சிறந்த வடிவமைப்பு, தனித்துவமான தோற்றம் மற்றும் பொருத்தமான விலையுடன் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சர்வீஸ் சென்டர்கள் பற்றிய தேவையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மாவட்டம் தோறும் புதிய சர்வீஸ் சென்டர்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த புதிய சேவை மையம், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள சிட்ரோன் வாகன உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய வசதியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

