கோவை மாநகர காவல் ஆணையர் குறித்து புகார் வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு.

கோவை மாநகர காவல் ஆணையாளரின் உறவினர் என கூறிக்கொண்டு ஒரு கும்பல் நடவடிக்கையால் தொடர்ந்து புகார் கொடுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்வது தொடர்வதாகவும் இது தொடர்பாக மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுக்க அணுகினால் பார்க்க அனுமதிப்பதில்லை என்பதால் இவ்விவகாரங்களில் சந்தேகம் இருப்பதாக வழக்கறிஞர்கள் கோவையில அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

கோவையில் வழக்கறிஞர் தொழில் புரிந்து வருபவர் சாஜித் இவருக்கு கடந்த ஓராண்டுகளாக வழக்கு நடத்த வரும் நபர்களின் புகார் மனுவை கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்தால் , சம்பந்தபட்ட நபர்களை கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தரின் உறவினர்கள் என கூறிக்கொண்டு விக்ரம் , இமாமி சோமசுந்தரம் , புருசோத்தமன் ஆகியோர் புகார் மனு அளித்தவர்களை அணுகி தாங்கள் கூறுவது போல் நடந்து கொள்ளுங்கள் என மிரட்டுவதாகவும் அவ்வாறு செய்யாவிடில் உங்கள் மீதே வழக்கு பாயும் என மிரட்டுவதாகவும் தெரிவிக்கும் வழக்கறிஞஎ சாஜித் அதற்கு உடன்படாத நபர்கள் மீது அந்த கும்பல் சொல்வதை போலவே , யார் மீது புகார் கொடுத்தாமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் , புகார் அளித்தவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து பல கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நடந்துள்ளது , வழக்குப்பதிவு செய்து மிரட்டி புகார் தாரர்களிடம் இருந்து பணப்பறிப்பு சம்பவங்களும் நடந்துள்ளதாக தெரிவிக்கும் சாஜித் , இந்த சம்பவங்கள் தங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் அதனை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தரை அணுகி இந்த கும்பல் குறித்து புகார் கொடுக்க சென்றால் அவர் சந்திக்க அனுமதிப்பதில்லை என்பதால் இதில் மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் மீது சந்தேகத்தை எழுப்புகிறது எனவே இவ்விவகாரஙக்ளை
சி பி ஐ டி விசாரிக்க வேண்டும் என்றும் , ஒவ்வொரு முறையும் புகார் கொடுக்க மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்றால் அந்த புகார் தொடர்பாக கமிஷனரின் உறவினர்கள் என க்கூறி அந்த கும்பல் அணுகி கட்டப்பஞ்சாயத்து செய்வது விசித்திரமாக உள்ளதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *