பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களுக்கு வாரம் ஒரு முறை யோகாசனம் பயிற்சி வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, ஆனைமலை, கோட்டூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் வருகின்றனர். மகப்பேறு சிசிச்சை பிரிவில், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், வாரம் தோறும், பொள்ளாச்சி யோகா அண்ட் நேச்சுரோபதி பிரிவின் மூலம், மருத்துவர் அர்ச்சனா மற்றும் பெண் பயிற்சியாளர் ஜான்சிராணி ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சியை மேற்கொள்வதால், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற வாய்ப்பு அதிகரிக்கும் என்று யோகாசன பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். இதில், ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கலந்துகொண்டனர்.