பொள்ளாச்சி அருகே ஆனைமலை நாகரூத் பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியினருடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், 84 குடும்பங்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், பழங்குடியினரின் நலத்துறை மூலம் அக்குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தார்.
இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, ஆனைமலை வட்டாட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.