![சிறுத்தைகள் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சம்: வனத்துறைக்கு கோரிக்கை சிறுத்தைகள் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சம்: வனத்துறைக்கு கோரிக்கை](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/IMG-20250110-WA0044.jpg)
வால்பாறை அருகே உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நுழைந்து நடந்து செல்லும் காட்சிகள் சமீபத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விட்டது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலைக்கு தீர்வு காண வனத்துறையினர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய வனவிலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்ப, ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த சிறுத்தைகளை பிடிக்க கூண்டு அல்லது பிற நடவடிக்கைகளை எடுக்க வனத்துறையினர் உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.