Friday, December 27

25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல்…

52 ஆண்டுகளின் பழமைவாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (பிரஸ் கிளப்) கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்வரும் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் கோரிக்கையின் பேரில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி பாரதிதாசன் வெளியிட்ட அறிவிப்பின் படி, அடுத்த மாதம் மன்றத்தின் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.

தேர்தல் காலக்கட்டங்கள்

வேட்புமனு தாக்கல்: நவம்பர் 29 முதல் டிசம்பர் 7 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.

வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 9, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.

வேட்புமனு திரும்பப் பெறல்: டிசம்பர் 10.

இறுதி வேட்பாளர் பட்டியல்: டிசம்பர் 10 மாலை 6 மணிக்கு.

வாக்குப்பதிவு: டிசம்பர் 15, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை அதே நாளில் மாலை 6 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதன்மை உறுப்பினர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் மற்றும் போட்டியிடும் தகுதி உண்டு.

இதையும் படிக்க  கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச சந்திப்பு நிகழ்ச்சி !

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு நடைபெறும் தேர்தல், மன்றத்தின் புதியகட்டத்தை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *