பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமையில் நோய் தடுப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தற்போது மாறுபட்ட கொரோனா சிக்கன்குனியா டெங்கு காய்ச்சல் குரங்கு அம்மை நிப்பா வைரஸ் போன்ற நோய்கள் பரவி வருவதால் அவசர சிகிச்சை பிரிவில் மற்றும் உள்நோயாளிகள் பிரிவில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சோப்பில் கை கழுவுவது கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் நோயாளிகள் மருந்து கடையில் மருத்துவர் அனுமதி இல்லாமல் மாத்திரை வாங்கி சாப்பிடுவது ஊசி போட்டுக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டது காய்ச்சல் உட்பட உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் நோய் அதிகமான பின் மருத்துவமனைக்கு வந்தாலும் மருத்துவரால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்பது குறித்து பொது மக்களிடையே மருத்துவார்கள் செவிலியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
அதிக காய்ச்சல் உடல் சோர்வு உணவு உட்கொள்ளுவதில் பிரச்சினை வாந்தி உடல் அசதி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு உடனே வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் கூறும் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும்
டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு தண்ணீர் காய்ச்சி அருந்த வேண்டும் வீட்டிற்கு அருகில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதை அப்புறப்படுத்தினால் கொசு ஈக்கள் மூலம் வரும் நோய்களை கட்டுப்படுத்தலாம் என மருத்துவமனை கண்காணிப்பாளர் கூட்டத்தில் அறிவுறுத்தினார்
நிகழ்ச்சியில் இருப்பிட மருத்துவர் மாரிமுத்து நோய் தடுப்புத் துறை மருத்துவர் சிந்துஜா செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி உட்பட மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்கள் நோயாளிகளின் உறவினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்