SDPI கட்சி கோரிக்கையின் எதிரொலியாக முறையான சாலையை அமைக்கும் மாநகராட்சி நிர்வாகம்.

IMG 20240920 WA0010 - SDPI கட்சி கோரிக்கையின் எதிரொலியாக முறையான சாலையை அமைக்கும் மாநகராட்சி நிர்வாகம்.

திருச்சி 29 ஆவது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் முறையற்ற முறையில் சாலை அமைப்பதை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அவர்கள் பார்வைக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பாக கோரிக்கை வைத்ததின் எதிரொலியாக.

img 20240920 wa00138072958235994995109 - SDPI கட்சி கோரிக்கையின் எதிரொலியாக முறையான சாலையை அமைக்கும் மாநகராட்சி நிர்வாகம்.

இன்று19.09.2024 மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 29வது மாமன்ற உறுப்பினர் அழைப்பின் பேரில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா அவர்களின் தலைமையில் கள ஆய்வு செய்தனர்.

சரியான முறையில் சாலையை அமைத்து தருகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன்,மேற்கு தொகுதி துணை தலைவர் K.முஹம்மது சலீம்,தொண்டரணி தலைவர் முகமது ஆரிப்,சமூக ஊடக அணி தலைவர் உபைதூர் ரஹ்மான்,29 வது வார்டு ஆழ்வார் தோப்பு மற்றும் அண்ட கொண்டான் கிளை நிர்வாகிகள்,
பொதுமக்கள் உடனிருந்தார்கள்.

இதையும் படிக்க  குடிநீர் வடிகால் ஓய்வூதியர் சங்க பேரவைக் கூட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *