பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு,இன்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கால்நடை வாரச் சந்தைகளில் ஆடு வளா்ப்பவா்களும், ஆட்டு வியாபாரிகளும் ஆயிரக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.700-க்கு விற்பனையான 1 கிலோ ஆட்டுக்கறி, இந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
You May Like
-
2 months ago
நவராத்திரி: 10 அடி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
-
1 month ago
சாலையோர வியாபாரிகள் மடிப்பிச்சை !