
மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு தேவையில்லை –எம்.பி. ஈஸ்வரசாமி
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் ₹2.33 கோடி மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வசதிகளாக 6 வகுப்பறைகள், ஒரு ஆய்வகம் மற்றும் குடிநீர் வசதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு கட்டிட வேலைகளைத் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், காணியப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரசாமி, தமிழகத்தில் கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், கலைஞர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த முன்னேற்றம் தொடர்ந்துகொண்டிருக்கிறதையும் குறிப்பிட்டார். இந்தியாவின் மிக அதிகம் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்தே வருகின்றனர், அதிலும் பெண்கள் கல...