
மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்:பொதுநல அமைப்புகள் கண்டனம், நடவடிக்கை வேண்டுகோள்!
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மணிகண்டன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் பள்ளி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத மாற்றுப் பள்ளி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் புலன்விசாரணை தவளக்குப்பம் காவல் நிலையம் சார்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பிப்ரவரி 17, 2025 அன்று, பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோரின் தூண்டுதலால், ஆசிரியர்கள், மாணவர்கள் தவளக்குப்பம் – கடலூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் குற்றவாளி அப்பாவி என்பதோடு, அவர் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே அவரை விடுவிக்க வேண்டும், பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ப...