சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த புத்தக கண்காட்சியில், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக்ஸ் இணைந்து 10க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் தமிழ், இலக்கியம், வரலாறு, சட்டம், பொது அறிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தின. வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை பார்த்து வாசித்து வாங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை ஏற்றார்.