காரைக்குடி அருகே உள்ள இழுப்பக்குடி கிராமத்தில் 100 நாள் வேலைக்கு வந்த பொதுமக்களை சாக்கோட்டை யூனியன் அதிகாரிகள் வேலை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காரைக்குடி-அரியக்குடி-உஞ்சனை-மாத்தூர்-தேவகோட்டை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் காரணமாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் சென்று, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இழுப்பக்குடி கிராமம் தற்போது காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டதன் காரணமாகவே வேலை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.