நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காவல் நிலையத்தில் இந்திய இறையன்மைக்கு எதிராக பேசியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கண்டித்து, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அசாம் மாநில பாஜக அரசை கண்டிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான காங்கிரஸ் கட்சியினர் கலந்து, ராகுல் காந்தி மீது உள்ள வழக்கை திரும்ப பெறக் கோரி, பாஜக அரசையும் கண்டித்து பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.