சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ப. சிதம்பரம் குடும்பத்தாரால் பொது மக்களின் பயன்பாட்டிற்கு 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். பின்னர், அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா அரங்கில் உரையாற்றிய முதல்வர், “வள்ளல் அழகப்பர் வாழ்ந்த மண்ணிற்கு வந்ததில் பெருமை அடைகிறேன். கல்விக்காக அவர் செய்த தொண்டை பாராட்ட வேண்டும். இந்த வகையில், வள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாடும் ஒரு கூட்டமே உள்ளது” என கருத்து தெரிவித்தார்.
மேலும், ப. சிதம்பரத்தை ‘நடமாடும் நூலகம்’,”நூலகம் திறப்பதில் பெருமை அடைகிறேன். எனக்கு பரிசாக கிடைத்த 2 இலட்சத்து 75 ஆயிரம் புத்தகங்களை பல நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். தற்போது, ப. சிதம்பரம் நூலகத்திற்கு 1000 புத்தகங்களை அனுப்பி வைக்கப்போகிறேன்” என்றார்.
அதே நேரத்தில், தமிழ்நாடு உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கின்றது என்றும், அரசின் கட்டுப்பாட்டில் கல்வி துறை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்காக இறுதி வரை சட்டப் போராட்டம் நடத்தப்படும் என உறுதிபடுத்தினார்.