திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி ஒட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக் சேர், பானை உடைத்தல், நடனப் போட்டி, பாட்டுப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி, வெற்றியாளர்களை பாராட்டினார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோபியா விமலராணி, 24 வட்டு செயலாளர் பிரேம்குமார் மற்றும் 24 வட்டு பிரதிநிதி சாமிநாதன் ஆகியோரும் உள்நுழைந்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை 24 வது வட்ட திமுக நிர்வாகி கமல் மற்றும் RNR சகோதரர்கள் செய்திருந்தனர்.