Wednesday, February 5

பாரம்பரிய முறையில் பொங்கல் வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள சலுகைபுரம் கிராமத்தில், பாரம்பரிய முறையில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி, ஆபரனங்களை அணியாமல், ஏற்ற தாழ்வுகளை கலைந்து, ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த பாரம்பரிய முறை 9 தலைமுறைகள் கடந்து தொடர்ந்துவருவது சிறப்பாக அமைகிறது.

இந்த கிராமம் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளது. இன்றும், பொங்கல் திருநாளில், இங்கு வாழும் பெண்கள் வெள்ளை சேலை அணிந்து, குல தெய்வமான பச்சை நாச்சியமன் கோவிலுக்கு விரதமிருந்து, பழமையான முறையில் வழிபாடு செய்கின்றனர். இந்த இடத்தில் பெண்கள் மண் கலையங்களை தலையில் சுமந்து, மந்தையில் கூடிவந்து, பூசாரியுடன் இணைந்து சாமியாடி பூஜையை நடத்தி, பின்னர் ஊர்வலமாக மாடுகளை அடைத்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள்.

பொங்கல் நிகழ்ச்சியில் ஆண்களும் சட்டை அணியாமல் பங்கேற்று, பெண்களுக்கு உதவுகின்றனர். கோவிலில் நேர் தியாகமான பொருட்களை ஏலம் விடுவதும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும், இதில் ஒரு கரும்பு பல ஆயிரம் ரூபாய் வரை ஏலம்போகும் என்பது சிறப்பு.

இதையும் படிக்க  "தண்ணீர் வழங்க கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *