Wednesday, February 5

பாரம்பரிய உடையில் பொங்கல் விழா: சிறுவர்களின் உற்சாகமான கொண்டாட்டம்

தமிழர் பண்டிகையான பொங்கல், இம்முறை தென்காசி மாவட்டத்தில் சிறுவர்களின் உற்சாகமான கொண்டாட்டத்துடன் கொண்டாடப்பட்டது. மேலகரம் பகுதியில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது.

பாரம்பரிய உடையில் பொங்கல் விழா: சிறுவர்களின் உற்சாகமான கொண்டாட்டம்

பள்ளியின் தாளாளர் டேனி அருள் சிங் தலைமையில், மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகளில், வேஷ்டி சட்டை, பட்டு பாவாடைகள் அணிந்து மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் வாழ்த்துக்களுடன் விழாவை தொடங்கினர்.

பொங்கல் விழாவின் ஒரு பகுதியான பானை உடைத்தல் போட்டியில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக பானையை உடைத்தனர். அதன்பிறகு, இசை நாற்காலி, முறுக்கு கடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் மாணவ-மாணவிகள் தங்களது நடன திறனையும் வெளிப்படுத்தினர்.

பாரம்பரிய உடையில் பொங்கல் விழா: சிறுவர்களின் உற்சாகமான கொண்டாட்டம்

“பொங்கலோ பொங்கல்!” என்று உற்சாகமாக கூச்சலிட்ட குழந்தைகள், விழாவின் மகிழ்ச்சியை பிரதிபலித்தனர். இவ்வாறு, தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

பாரம்பரிய உடையில் பொங்கல் விழா: சிறுவர்களின் உற்சாகமான கொண்டாட்டம்

இதையும் படிக்க  திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட்டிய கைதி.......

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *